முதுமை வியாதியால் பாதிக்கப்பட்ட Youtuber அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் காலமானார்.




அடாலியா ரோஸ் வில்லியம்ஸ்  3-ம் வயது முதலே Hutchinson-Gilford progeria syndrome- என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 15 வயதான அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் 'இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்' என எழுதியிருக்கிறார். அவரது இந்த பேஸ்புக் பதிவை 805,000 க்கும் மேற்பட்ட லைக் செய்துள்ளனர். 158,000 க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.

''அமைதியாகவே வந்தாள், அமைதியாகவே சென்றுவிட்டாள். இருப்பினும், மில்லயன் கணக்கான மக்களின் மனதில் முத்திரை பதித்துவிட்டாள். 

                ரோஸ் வில்லியம்ஸ் 3-வயதாக இருக்கும்போது, முதுமையை துரிதப்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. 13 ஆண்டுகள் மட்டுமே அவரது ஆயுட்காலம் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

 கடந்த 2012ம் ஆண்டு முதல் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவர் தனது உடல்நலன் தொடங்கி ஃபேஷன் மற்றும் மேக்-அப் பயிற்சிகள் வரை அனைத்தையும் பதிவிட்டு வந்தார்.

யூடியூப்பில் அவருக்கு 2.91 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாகிராமில் 379,000 க்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்

மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் நாளை திறப்பு

கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்