திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்



 வளமான எதிர்காலத்துக்காக

திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்


திருச்சபைக்கு வளமான எதிர்காலம் வேண்டும் என்றால் அது நம்முடைய  புத்தக வாசிப்பில் இருந்து ஆரம்பமாக வேண்டும்

வளமான திட்டங்கள் எங்கே?

மிஷனரிகளின் திட்டமிடுதல் எல்லாமே நெடுநாள் நிலைத்து நிற்கும் திட்டங்களாகவே இருந்தன. இதற்கு கஸ்பா சபை ஒரு உதாரணம்நம்முடைய நாட்டிலும் சரி, சபைகளிலும் சரி வளமான திட்டங்கள் செயலில் இல்லை. நாட்டில் 10 ஆண்டுகள் திட்டம் கூட தீட்டபடுவதில்லை. நாட்டில் தான் இந்த நிலைமை என்றால் சபைகளில் ஒரு ஆண்டிற்கான திட்டங்களே பெரும்பாலும் செயலில் உள்ளன. ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னால் இன்னோரு நிகழ்வு, இப்படிதான் போய்கொண்டு இருக்கிறது.கடைசியில் என்ன நடந்தது என்றால் ஒன்றும் இல்லை.

நூலகங்களுக்கு புத்துயிர் 

சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றால் நூலகங்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். ஒரு சிலர் அல்ல ஒட்டுமொத்த சபை மக்களுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக மாற வேண்டும். 

வேதாகம விளக்க உரை, மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு, சபை வரலாறு, அன்றாட செய்திதாள் ஆகியவற்றை வாசிக்க ஊக்குவிப்போம்.

பண்டிகை நாள்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள் கொடுபதற்கு பதிலாக புத்தகங்கள் கொடுக்கலாமே.  

நூலகத்திற்கு என்று ஒரு சபைகுழு அங்கத்தினரை நியமிக்கலாமே.

நம்மிடம் இருக்கும் நூலகத்திற்கு புத்துயிர் கொடுக்கலாமே.






Comments

Popular posts from this blog

மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் நாளை திறப்பு

கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்