கல்கோவில் புதுபொலிவிடன் ஜொலிப்பதால், மக்கள் உற்சாகம்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த கல்கோவில் அர்பணம் சிறப்பாக நடைபெற்றது புதுபொலிவுடன் ஜொலிப்பதால் மக்கள் உற்சாகம் நாகர்கோவில், நவ.29- மிகுந்த ஆவலுக்கு மத்தியில் கல்கோவில் அர்பணம் சிறப்பாக நடைபெற்றதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்மாதிரியான சபை நாகர்கோவிலின் மையம்பகுதியில் அமைந்துள்ள கல்கோவில் மிகவும் பழமையான பாரம்பரியத்தை கொண்டது. இது கிரேக்க வடிவமைப்பை கொண்டதும். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் இருதயத்தில் ஒன்றோடு கலந்து விட்ட ஒரு திருச்சபை ஆகும். பல மிஷனரிகள், போதகர்கள் மற்றும் ஊழியக்காரர்களை உருவாக்கிய முன்மாதிரியான சபையாகும் மறுசீரமைப்பு பணி கடந்த 2 வருடங்களாக இந்த திருச்சபையில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் ஆலய ஆராதனைகள் ஆலன் கால் மண்டபத்தில் வைத்து நடைபெற்று வந்தது. மறுசீரமைப்பு பணிகளை திருச்சபை போதகர் தலைமையில் சபைகுழு மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்துவந்தனர். புதுப்பொலிவுடன் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில். இதன் திறப்பு விழாவை பொதுமக்கள் மிகவும் ஆவ...