குமரி மாவட்டத்தில் தனியார் கல்வி நிருவனங்கள் அராஜகம்


 

கொரோனாவை காரணம் காட்டி

தனியார் கல்வி நிருவனங்கள் அராஜகம்

ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

நாகர்கோவில், நவ.21-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோவை காரணம் காட்டி தனியார்  கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளங்களை சரிவர கொடுக்காததால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொற்று முடிந்தும் முடியாத சோகம்

கொரோனா தொற்றின் போது பொதுமுடக்கத்தால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதை காரணம் காட்டி தனியார் நிருவனங்கள் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை  வெகுவாக குறைத்தனர். தற்போது நோய் தொற்று  குறைந்து  படிப்படியாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட தொடங்கினர். ஆனாலும் குறைக்கப்பட்ட சம்பளத்தையே நிறுவனங்கள் கொடுக்கின்றன. மேலும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் 3  முதல் 5 மாதங்கள் சம்பள பாக்கியை  வைத்துள்ளனர். இதனல்  தொற்று முடிந்தும்,  முடியாத சோக கதையாக மாறியுள்ளன ஆசிரியர்களின்  வாழ்வாதாரம்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடந்த நாட்களில் சில ஆசிரியர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. தனியார் நிறுவனங்களின் இந்த அராஜக போக்கை தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கின்றது. குறிப்பாக விவசாயிகளின் பிரச்சனை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில்  பிரச்சனைகளிளேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஏனென்றால் அவையே அரசாங்கத்துக்கு நல்ல விளப்பரத்தை தேடி தருவதாக இருக்கிறது.  

இனியாவது அரசு தனியார் நிறுவன ஆசிரியர்கள் விஷயங்களின் கவனம் செலுத்துமா? என்பது தான் பலரது எதிர்பார்பாக உள்ளது.


Comments

Popular posts from this blog

திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்

மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் நாளை திறப்பு

கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்