மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் நாளை திறப்பு
மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில்
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை திறப்பு
பொதுமக்கள் உற்சாகம்
நாகர்கோவில், நவ 27-.
கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து, புது பொலிவுடன் கல்கோவில் மீண்டும் திறக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளனர்.
நீண்ட பாரம்பரியம்
ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக சி.எஸ்.ஐ, ஹோம் சர்ச் உள்ளது. I200 ஆண்டுகளாக மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. இது 1819-ம் ஆண்டு புருஸ்ய நாட்டைச் சாாந்த வில்லியம் டோபியாஸ் ரிங்கல் தௌபே பிரபுவின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இக்கட்டிடம் 140 அடி நீளமும், 70 அடி அகலமும் கொண்டு கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில் இது மிகப் பழமையானதும், மிகப்பெரியதும் ஆகும்.
பாராமரிப்பு பணிகள்
கடந்த 2 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் மேற்கூரை அமைப்பு மற்றும் வெளி உட்புற சுவர்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பராமரிப்பு பணிகளை சபை போதகருடன் சேர்ந்து, சபைக்குழு மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டனர். தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை திறக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் உற்சாகம்
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து புதுபொலிவுடன் தேவாலயம் காட்சி அளிப்பதால் அதை பார்வையிட பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளி ஊர்களில் வசிக்கும் இந்த தேவாலயத்தை சேர்ந்த மக்கள் இதற்காகவே தங்கள் சொந்த ஊருக்கு படை எடுத்து உள்ளனர்.
இதை குறித்து சபை போதகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.‘நாளை காலை சரியாக 9:30 மணிக்கு ஆலய அர்பணம் நடைபெறும் எனவும், அதனை தொடர்ந்து அன்பின் விருந்து பரிமாறப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க அன்புடன் அழைப்பதாகவும்’. அந்த அறிக்கையில் கூறபட்டு இருந்தது.
ஆலயத்தின் உட்புற தொற்றம்
Comments
Post a Comment