மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை திறப்பு பொதுமக்கள் உற்சாகம் நாகர்கோவில், நவ 27-. கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து, புது பொலிவுடன் கல்கோவில் மீண்டும் திறக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளனர். நீண்ட பாரம்பரியம் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக சி.எஸ்.ஐ, ஹோம் சர்ச் உள்ளது. I200 ஆண்டுகளாக மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. இது 1819-ம் ஆண்டு புருஸ்ய நாட்டைச் சாாந்த வில்லியம் டோபியாஸ் ரிங்கல் தௌபே பிரபுவின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இக்கட்டிடம் 140 அடி நீளமும், 70 அடி அகலமும் கொண்டு கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில் இது மிகப் பழமையானதும், மிகப்பெரியதும் ஆகும். பாராமரிப்பு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் மேற்கூரை அமைப்பு மற்றும் வெளி உட்புற சுவர்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பராமரிப்பு பணிகளை சபை போதகருடன் சேர்ந்து, சபைக்குழு மற்றும் பொதுமக்கள் மேற்கொண்...
Comments
Post a Comment