வீட்டில் திருச்சபை



                   வீட்டில் திருச்சபை

மூங்கில்விளையை  சார்ந்த திரு. பழனி என்கிற வேதநாயகம் நாயகம் முதல் முதலாக இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவராக மாறினார்

பின்னர் அவர்  1855-ல் லண்டன் மிஷனரிகளோடு சேர்ந்து கல்குளம் விளவங்கோடு பகுதிகளில் இயேசுவை அன்பை அறிவித்தார்அவருடைய பணியின் மூலம் 1857-ல் ஞாயிறு ஆராதனை அவரது வீட்டு முற்றத்தில் முதல்முதலாக நடத்தப்பட்டது .

இதன் மூலம் இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொண்ட இந்தப் பகுதியின் முக்கியமானவர்களில் ஒருவர் கோட்டவிளை சார்ந்த திரு. லாவுத்தர் என்கிற யோவான் மற்றும் மூங்கில்விளையை சார்ந்த திரு. அருளானந்தம்.

இதன் விளைவாக தான் நம்முடைய திருச்சபை இன்று ஓங்கி எழும்பி நிற்கிறது.

நம்முடைய திருச்சபை மட்டும் அல்ல, என்னுடைய புரிந்துக்கொள்ளுதலின்படி ஆதிக்கால திருச்சபைகள் வீட்டில் தான் நடந்து உள்ளது. கொரோனா லாக்டவுன் மறுபடியும் நமக்கு இந்த அரிய வாய்ப்பை தந்து இருக்கிறது.

வீட்டில் உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து ஆராதனை நடத்துங்கள். சிறு வயது முதலே ஆராதனைகளை பார்த்து வளர்ந்த நமக்கு ஆராதனை எப்படி நடத்த வேண்டும் என்று செல்லியா தரனும்?

There were House Churches in Jerusalem where there was not only worship and breadbreaking but also teaching and preaching (Acts 2:46; 5:42). 

வீட்டில் திருச்சபை நடத்துவதால் வரும் பயன்கள்

1) வெறும் பார்வையாளர்களாக இருந்தவர்கள், செயல்பட தொடங்குவர்.

2) திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு வழி

3) புதிய தலைவர்கள் உருவாகுவார்கள்

4) கிறிஸ்தவர் அல்லாதவர்கள் ஆலயத்துக்குவர தயங்குவார்கள், ஆனால் உங்கள் வீட்டுக்கு வர தயங்கமாட்டார்கள்.

5) நல்ல முறையில் வேதாகமத்தை புரிந்துக்கொள்ளலாம்

6) ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கலாம்




Comments

Popular posts from this blog

திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்

மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் நாளை திறப்பு

கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்