கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம்


 

கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம்


கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்  இருந்தது.  அந்த கால கட்டத்தில் பல சமுதாய பிரச்சனைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்து வந்தனர். 

குறிப்பாக சாதி அடிப்படையிலான பிரச்சனைகள் தலை தூக்கி ஆடியது. 


தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, தொழில்  மற்றும் அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை, மேலும் அவர்கள் மார்பகங்களை மறைக்க விரும்பினால் பிராமண மன்னருக்கு மூலக்கரம் (மார்பக வரி) செலுத்த வேண்டும். 

இந்த வரி அவர்களின் மார்பக அளவைப் பொறுத்து இருந்தது.

இந்த கொடுமையை மிஷனரிகளும், திருச்சபைகளும் பலமாக எதிர்த்தனர். 

லண்டன் மிஷனரி இயக்கம் இதை கடுமையாக எதிர்த்தது மட்டும் அல்ல பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி 1859-ம் ஆண்டு விடுதலையும் பெற்று தந்தது. தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணியத் தொடங்கினர். 

அனைவரையும் கடவுளால் சமமாக படைத்துள்ளார் என்ற வேதாகம கொள்கை மிஷனரிகளால் நிலை நிறுத்தப்பட்டது.

அனைவரையும் சமமாக நடத்தும் பண்பு மற்றும் மிஷனரிகள் காட்டிய அன்பால்  மக்கள் இயேசுவுக்கு நேராக ஈர்க்கப்பட்டனர்.

இந்த காலக்கட்டத்தில் தான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பல நாடார் இனத்தை சார்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். இதனால் 18-ம் நூற்றாண்டு மிஷனரிகளில்  கனி நிறைந்த காலமாக இருந்தது. 

இதன் விளைவாக பல திருச்சபைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில்  நிறுவப்பட்டது.

மேலும் பல தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் மிஷனரிகளுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினர்.

 

Comments

Popular posts from this blog

திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்

மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் நாளை திறப்பு

கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்